பாதிக்கபட்ட குடும்பத்திற்கு ஆறுதல்: பிரியங்கா, ராகுல் காந்தி வருகைக்கு முன்னதாக ஹத்ரஸில் 144 தடை உத்தரவு

பாதிக்கபட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூற பிரியங்கா, ராகுல் காந்தி ஆகியோரின் வருகைக்கு முன்னதாக ஹத்ரஸ் கிராமத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டு உள்ளது.

Update: 2020-10-01 05:27 GMT
ஹத்ரஸ்: 

உத்தரபிரதேசத்தின் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் பிரியங்கா காந்தி வதேரா மற்றும் சகோதரர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று ஹத்ரஸ் கும்லால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க உள்ளனர். 

அவர்களின் வருகைக்கு முன்னதாக, பிரிவு 144 ஹத்ரஸில் விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரின் கிராமத்திற்குள் நுழைவதற்கு ஊடகங்களுக்கும் தடை விதிக்கபட்டு உள்ளது . வழக்கின் விசாரணையை தடை செய்யும் என்று கூறியுள்ளது.

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருடன் பிரியங்கா காந்தி பேசினார், மேலும் அவர்களிடம் அவர்கள் வீட்டிற்கு வருவதாக  உறுதியளித்திருந்தார். இது குறித்து திட்டமிடப்பட்டு வருகிறது. அவர் எப்போது வேண்டுமானாலும் செல்லலாம்," என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்