நீட் தேர்வை வைத்து மாநிலங்களை மத்திய அரசு பழிவாங்க கூடாது - நாராயணசாமி
நீட் தேர்வை வைத்து மாநிலங்களை மத்திய அரசு பழிவாங்க கூடாது என்று புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
நீட் தேர்வால் ஏற்பட்ட மரணங்கள் தற்கொலை அல்ல, கொலை. நீட் தேர்வால் ஏற்பட்ட மரணங்களுக்கு மத்திய அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்.
நீட் தேர்வை வைத்து மாநிலங்களை மத்திய அரசு பழிவாங்க கூடாது. நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு பிரதமர் பொறுப்பேற்க வேண்டும்.
மாணவர்களின் நலனை மத்திய அரசும், பிரதமரும் காக்க வேண்டும். புதுச்சேரி காவல்துறையினர் அரசுக்கு அவப்பெயர் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.