சமூக செயற்பாட்டாளர் சுவாமி அக்னிவேஷ் உடல்நலக் குறைவால் காலமானார்

சமூக செயற்பாட்டாளர் சுவாமி அக்னிவேஷ் டெல்லியில் உடல்நலக் குறைவால் காலமானார்.

Update: 2020-09-11 15:55 GMT
புதுடெல்லி,

ஆந்திர மாநிலம் ஶ்ரீகாகுளத்தில் 1939-ம் ஆண்டு பிறந்தவர் சுவாமி அக்னிவேஷ். தற்போது இருக்கும் சட்டீஸ்கரில் இருந்த சக்தி மாகாண திவானாக பணியாற்றிய தாத்தாவின் அரவணைப்பில் வளர்க்கப்பட்டார் அக்னிவேஷ்.

கொல்கத்தா செயின்ட் சேவியர் கல்லூரியில் பட்டம் பெற்றார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பின்னாளில் பணியாற்றிய சப்யாசாச்சி முகர்ஜியிடம் ஜூனியர் வழக்கறிஞராகவும் பயிற்சி பெற்றார்.

1970களில் ஆரிய சமாஜ் அமைப்பின் கொள்கைகளை பின்பற்றி ஆரிய சபா என்ற தனிக்கட்சியை தொடங்கிய சுவாமி அக்னிவேஷ். 2004-2014ல் இதன் அகில உலக தலைவராகவும் இருந்தார்.

அரியானாவில் 1977-ல் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு 1979ல் அம் மாநில கல்வித்துறை மந்திரியாகவும் பதவி வகித்தார்.  நாடு முழுவதும் கொத்தடிமை தொழிலாளர்களை மீட்பதில், பெண்சிசு கொலை தடுப்பு போன்ற சமூக பணிகளில் பங்காற்றினார்.

அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் தொடக்கத்தில் இணைந்து பணியாற்றினார். 2011-ல் மாவோயிஸ்டுகளுக்கும் அரசுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைக்கான தூதராகவும் பணியாற்றினார்.

இந்நிலையில், கல்லீரல் நோய்க்கு டெல்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுவாமி அக்னிவேஷ் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்