மும்பையில் லேசான நில அதிர்வு: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு
மும்பையில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பையின் வடக்கில் 98 கி.மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 3.5 ஆக நில நடுக்கம் பதிவானதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை. முன்னதாக, கடந்த 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் முறையே 2.7 , 2.8 என்ற அளவில் நிலநடுக்கம் மேற்கூறிய அதே இடங்களில் உணரப்பட்டது. அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுகக்ங்கள் அப்பகுதி மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.