ஆந்திராவில் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம கோவிலுக்கு சொந்தமான தேர் தீப்பிடித்து எரிந்தது: பக்தர்கள் அதிர்ச்சி

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம கோவிலுக்கு சொந்தமான தேர் நள்ளிரவில் தீப்பற்றி எரிந்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-09-06 03:34 GMT
ஐதராபாத்,

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அந்தர்வேதியில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான தேர், கோவில் வளாகத்தில் உள்ள கூடாரத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென இந்த தேர் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தேர் தீப்பற்றி எரிந்ததாக் மக்கள் அங்கு பெருமளவில் கூடிவிட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் தேர் முழுவதும் எரிந்து கரிக்கட்டையானது. கோவிலுக்கு சொந்தமான வரலாற்று சிறப்பு மிக்க தேர் எரிந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.

அதிகாலை 3 மணிக்கு தீ அணைக்கப்பட்டதாகவும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். தேருக்கு விஷமிகள் யாராவது தீ வைத்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.  ஸ்ரீ லட்சுமி நரசிம்ம கோவில் தேர் தீப்பிடித்து எரிந்ததால் பக்தர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

மேலும் செய்திகள்