பள்ளி பாடத்தில் என்.டி.ஆர் பற்றிய வாழ்க்கை வரலாறு சேர்த்தற்காக முதல்-மந்திரி சந்திரசேகர ராவுக்கு நடிகர் பாலகிருஷ்ணா நன்றி

முன்னாள் முதல்-மந்திரி என்.டி.ஆர் பற்றிய வாழ்க்கை வரலாறை பள்ளி பாடத்தில் சேர்த்தற்காக முதல்-மந்திரி சந்திரசேகர ராவுக்கு நடிகர் பாலகிருஷ்ணா நன்றி தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-06 02:51 GMT
ஐதரபாத்,

ஆந்திராவின் முன்னாள் முதல்-மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான என்.டி.ராமராவ் பற்றிய அவரது வாழ்க்கை வரலாறு  10-ம் வகுப்பு தெலுங்கு பாட திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

என்.டி.ஆர் தெலுங்கு தேசம் கட்சியை நிறுவுவது பற்றியும்,  பாஸ்கர் ராவ் ஆட்சி கவிழ்ப்பை நடத்திய பின்னர் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கான அவரது போராட்டம் பற்றியும் பேசுகிறது.

இதற்கு என்.டி.ராமாராவின் மகனும், நடிகருமான பாலகிருஷ்ணா முதல்-மந்திரி சந்திரசேகர ராவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

என்.டி.ராமாராவின் தீவிர ரசிகர் தெலங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்