உத்தரபிரதேசத்தில் கிளப்கள், பார்களை மீண்டும் திறக்க அம்மாநில அரசு அனுமதி

உத்தர பிரதேசத்தில் கிளப்கள், பார்களை மீண்டும் திறக்க அனுமதி அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

Update: 2020-09-05 06:05 GMT
லக்னோ,

உத்தர பிரதேசத்தில் ஊரடங்கின் 4 ஆம் கட்ட தளர்வாக கிளப்கள் மற்றும் பார்களை திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட இடங்களில் பார்கள், கிளப்கள் இருந்தால் திறக்க அனுமதி கிடையாது எனக்கூறியுள்ள மாநில நிர்வாகம்,   கொரோனா முன்னேச்செரிக்கை விதிகள் அனைத்தையும் பின்பற்றி செயல்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை கலால் துறை பிறப்பித்துள்ளது. 

50 சதவிகிதம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும். உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்து, அறிகுறிகள் தென்பட்டால், பார்களுக்கு  வர அனுமதி அளிக்கக் கூடாது என்பன போன்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கைகளை கழுவுவதற்கான சானிடைசர் திரவம்  வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.  காலை 10 மணிமுதல் இரவு 9 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்