ஜம்மு காஷ்மீர் பாரமுல்லாவில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை: ராணுவ அதிகாரி காயம்
ஜம்மு காஷ்மீர் பாரமுல்லாவில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ அதிகாரி காயம் அடைந்தார்.
ஸ்ரீநகர்,
வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பட்டான் பகுதியில் எதிபோரா என்ற இடத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர்.
முதற்கட்ட துப்பாக்கிச் சூட்டில் ராணுவ அதிகாரி ஒருவர் காயமடைந்திருப்பதாகவும் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து கொண்டிருப்பதாகவும் கூடுதல் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.