ஐ.பி.எஸ். தகுதி காண் பயிற்சி பெற்றவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்

ஐ.பி.எஸ். தகுதி காண் பயிற்சி பெற்றவர்களுடன் காணொலி காட்சி மூலம் பங்கேற்று பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.

Update: 2020-09-04 02:20 GMT
புதுடெல்லி,

ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய போலீஸ் அகாடமியில் ஐ.பி.எஸ். ஆக தேர்வு செய்யப்பட்ட 28 பெண்கள் உள்பட 131 பேருக்கு கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் முதல் ஐ.பி.எஸ். தகுதிகாண் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.

இதில் சட்டம், விசாரணை, தடயவியல், தலைமைப்பண்பு, மேலாண்மை, குற்றவியல், தடயவியல், பொது ஒழுங்கு, உள்நாட்டு பாதுகாப்பு, மனித உரிமைகள், தந்திரோபாயங்கள், ஆயுத பயிற்சி, நவீன இந்திய காவல்துறை, துப்பாக்கிச்சுடுதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

முதல் கட்டமாக நடந்த 42 வார அடிப்படை பயிற்சியை அவர்கள் முடித்து உள்ள நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய போலீஸ் அகாடமியில் ‘திக்சந்த் பாரடே’ அணிவகுப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்று ஐ.பி.எஸ். தகுதிகாண் பயிற்சி பெற்றவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

மேலும் செய்திகள்