ராஜஸ்தான் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு நிம்மதி; சபாநாயகர் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் தடை
ராஜஸ்தான் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க ராஜஸ்தான் ஐகோர்ட் தடை விதித்து உள்ளது.
ஜெய்ப்பூர்
காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கு எதிராக செயல்பட்டதாலும், கொறடா உத்தரவை மீறி காங்கிரஸ் சட்டமன்ற குழு கூட்டத்தில் பங்கேற்காததாலும் துணை முதல்-மந்திரியாக இருந்த சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேருக்கு, “உங்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது?“ என்று கேட்டு சபாநாயகர் சி.பி.ஜோஷி கடந்த 16-ந் தேதி நோட்டீஸ் அனுப்பினார். அந்த நோட்டீசுக்கு 17-ந் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
சபாநாயகரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ராஜஸ்தான் ஐகோர்ட்டில் சச்சின் பைலட் தரப்பு தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை இன்று (வெள்ளிக்கிழமை) வரை ஒத்திவைத்த நீதிபதிகள், அதுவரை தகுதி நீக்க நோட்டீஸ் மீதான நடவடிக்கையை நிறுத்தி வைக்குமாறு சபாநாயகருக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.
சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது -
ராஜஸ்தான் ஐகோர்ட் இன்று தீர்ப்பு அளித்தி உள்ளது.
காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.
ராஜஸ்தான் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கில் மத்திய அரசை ஒரு தரப்பாக சேர்க்க ஐகோர்ட் அனுமதி
அளித்து உள்ளது.
சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 19 பேர் மீது சபாநாயகர் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.