மாநிலங்களவை எம்.பி.க்களாக தம்பிதுரை, கே.பி.முனுசாமி, ஜி.கே.வாசன் உள்பட 45 பேர் பதவி ஏற்றனர் வெங்கையா நாயுடு பதவி பிரமாணம் செய்து வைத்தார்
மாநிலங்களவை எம்.பி.க்களாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த தம்பிதுரை, கே.பி.முனுசாமி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் உள்பட 45 பேர் நேற்று பதவி ஏற்றனர்.
புதுடெல்லி,
மாநிலங்களவை எம்.பி.க்களாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த தம்பிதுரை, கே.பி.முனுசாமி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் உள்பட 45 பேர் நேற்று பதவி ஏற்றனர். அவர்களுக்கு மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாக இருந்த 61 இடங்களுக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், மராட்டியம், மேற்கு வங்காளம், அசாம், இமாசல பிரதேசம், பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து உறுப்பினர்களை தேர்வு செய்ய கடந்த சில மாதங்களுக்கு முன் தேர்தல் நடைபெற்றது.
தமிழகத்தில் இருந்து காலியான 6 இடங்களுக்கு அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, கே.பி.முனுசாமி ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். அ.தி.மு.க. ஆதரவுடன் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தேர்வு செய்யப்பட்டார்.
மீதம் உள்ள 3 இடங்களுக்கு தி.மு.க. சார்பில் திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட 61 பேரில் 45 பேர் நேற்று மாநிலங்களவை எம்.பி.க்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். பதவி ஏற்பு விழா மாநிலங்களவை மண்டபத்தில் நடைபெற்றது.
அ.தி.மு.க. சார்பில் தேர்ந்து எடுக்கப்பட்ட தம்பிதுரை, கே.பி.முனுசாமி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், மத்திய பிரதேசத்தில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கர்நாடகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட 45 பேர் பதவி ஏற்றனர்.
அவர்களுக்கு துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு பதவி பிரமாணம் செய்து வைத்தார். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் உரிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. உறுப்பினர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பதவி ஏற்றனர்.
எம்.பி.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்த பின் வெங்கையா நாயுடு பேசுகையில், சபை நடவடிக்கைகள் ஆக்கபூர்வமாக அமைய புதிய உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், குறுகிய கால ஆதாயத்துக்காக சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்யக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.
முதன் முதலாக எம்.பி.யாகி இருப்பவர்கள் இந்திய வரலாற்றையும், சபை நடவடிக்கைகள் பற்றிய விவரங்களையும் தரமான புத்தகங்களை படித்து அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அப்போது அவர் கூறினார்.
நேற்று பதவி ஏற்றுக் கொண்டவர்களில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மத்தியபிரதேச முன்னாள் முதல்-மந்திரி திக்விஜய் சிங், ராம்தாஸ் அதவாலே உள்ளிட்ட 12 பேர் ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்தவர்கள். அவர்கள் மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.பி.க்களாகி இருக்கிறார்கள்.
தி.மு.க. மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் நேற்று பதவி ஏற்கவில்லை. நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன் தி.மு.க. எம்.பி.க்கள் பதவி ஏற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜோதிர் ஆதித்ய சிந்தியா, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட 43 பேர் மாநிலங்களவைக்கு புதியவர்கள் ஆவார்கள்.
பதவி ஏற்பு விழாவின் போது ஜோதிர் ஆதித்ய சிந்தியாவும், காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங்கும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.
மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர்களுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக சில மாதங்களுக்கு முன் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தனது ஆதரவாளர்களுடன் காங்கிரசில் இருந்து விலகி பாரதீய ஜனதாவில் சேர்ந்ததும், இதனால் அங்கு காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பாரதீய ஜனதா அரசு அமைந்ததும் நினைவு இருக்கலாம்.