மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது

மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது.

Update: 2020-07-18 15:58 GMT
மும்பை,

மராட்டியத்தை ஆட்கொல்லி வைரஸ் தனது கொடூரப்பிடியால் இறுக்கி வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வந்த போதிலும், நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது.

மராட்டியத்தில் இன்று ஒரே நாளில் 8,438 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  3,00,937- ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 11,596 ஆக உயர்ந்துள்ளது.  மராட்டியத்தில் 1,65,665 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 1,26,926 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளனர்.

பக்ரீத் பண்டிகை, விநாயகர் சதுர்த்தி ஆகிய விழாக்கள் விரைவில் வர உள்ள நிலையில், மக்கள் மத நிகழ்ச்சிகள்,  அரசியல் நிகழ்ச்சிகள், சமூக நிகழ்ச்சிகளில் கூட தடை தொடர்ந்து அமலிலேயே இருக்கும் என்று  முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மாநிலத்தில் பிற இடங்களிலும் தாராவி மாடலை பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக நடத்திய ஆலோசனையில் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்