இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,884 பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,884 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி
நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை இன்று வரை 10,38,716 ஆக அதிகரித்து உள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26,273 ஆக அதிகரித்து உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தகவலில்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,884 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,03,832லிருந்து 10,38,716ஆக உயர்ந்து உள்ளது
கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,35,757லிருந்து 6,53,751ஆக உயர்ந்து உள்ளது உயிரிழந்தோர் எண்ணிக்கை 25,602லிருந்து 26,273ஆக உயர்ந்து உள்ளது.