அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று :”விரைவில் நலம் பெறுங்கள்” ரசிகர்கள் பிரார்த்தனை

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமிதாப்பச்சன் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Update: 2020-07-12 00:50 GMT

மும்பை,

இந்தி திரைப்பட உலகின் முடிசூடா மன்னனாக திகழும் பிரபல பாலிவுட் நட்சத்திரம்  அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்ய்யப்பட்டுள்ளது.  தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமிதாப்பச்சனும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.   கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அமிதாப்பச்சன் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமிதாப்பச்சன் மகனும் நடிகருமான அபிசேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

அபிஷேக் பச்சன் தனது டுவிட்டர் பதிவில் நேற்று வெளியிட்ட பதிவில், “ எனக்கும் எனது தந்தைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவருக்குமே லேசான அறிகுறிகளே தென்பட்டன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறோம். எங்கள் குடும்பத்தினர் மற்றும் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். அனைவரும் அமைதியாக இருங்கள். அச்சப்பட வேண்டாம்” என்று பதிவிட்டு இருந்தார்.

அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானதும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள், திரைப்பிரபலங்கள்,  அரசியல் பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பதிவிட்டு வருகின்றனர்.

மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி,  உத்தர பிரதேச முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர், அமிதாப்பச்சன் விரைவில் குணமடையை பிரார்த்திப்பதாக பதிவிட்டுள்ளனர். அதேபோல், தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா, கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், சுரேஷ் ரெய்னா  ஆகியோரும் நடிகர் தனுஷ் உள்ளிட்ட திரை நட்சத்திரங்களும் விரைவில் குணமடையை பிரார்த்தனை செய்வதாக  பதிவிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்