கர்நாடக மாநிலத்தில் மேலும் 2,228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கர்நாடகாவில் இன்று மேலும் 2,228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2020-07-09 16:53 GMT
பெங்களூரு,

கர்நாடக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,105 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 17 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் கர்நாடகாவில் தற்போது கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 486 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இன்று 957 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 12,833 ஆக உயர்ந்துள்ளது. 

மாநிலம் முழுவதும் தற்போது 17,782 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சையில் உள்ளவர்களில் 457 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாக கர்நாடக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்