கர்நாடகாவில் இன்று 416 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கர்நாடக மாநிலத்தில் இன்று 416 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-06-20 16:00 GMT
பெங்களூரு,

கர்நாடகாவில் இன்று 416 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் 116 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்றும், 22 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,697 ஆக அதிகரித்துள்ளது. அதில் 3,170 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றன்ர். இன்று ஒரே நாளில் 181 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

கர்நாடகாவில் இன்று 9 பேர் கொரோனாவால் பலியானதை தொடர்ந்து அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 136 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் பெங்களூருவில் மட்டும் இன்று 94 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,076 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்