மருந்துப் பொருள்களைத் தொடர்ந்து அனுப்ப இந்தியா எடுத்த நடவடிக்கைகளுக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் பாராட்டு
அத்தியாவசிய மருந்துப் பொருள்களைத் தொடர்ந்து அனுப்ப இந்தியா எடுத்த நடவடிக்கைக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் பிரதமர் மோடியை பாராட்டினார்.
புதுடெல்லி,
பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடேர்தே உடன் இன்று தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி, கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டு வரும் சவால்களை எதிர்கொள்ள இரு அரசுகளும் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து இருவரும் தீவிரமாக விவாதித்தனர்.
தற்போது நிலவி வரும் சுகாதார நெருக்கடியின் போது, இரு நாடுகளிலும் உள்ள குடிமக்களின் நலனை உறுதி செய்யவும், அவர்கள் தாய்நாடு திரும்பவும் அளித்து வரும் ஒத்துழைப்பை இரு தலைவர்களும் பாராட்டினர்.
பிலிப்பைன்சுக்கு அத்தியாவசிய மருந்துப் பொருள்களைத் தொடர்ந்து அனுப்ப இந்தியா எடுத்த நடவடிக்கைகளுக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் பாராட்டினார்.
பெருந்தொற்றுக்கு எதிரான பிலிப்பைன்சின் போருக்கு உதவ இந்தியா உறுதி பூண்டுள்ளதாக அதிபர் டுடேர்தேவிடம் தெரிவித்த பிரதமர், ஒரு வேளை கொரோனாவிற்கு தடுப்பு மருந்துக் கண்டுபிடிக்கப்பட்டால் அதனையும் சேர்த்து, கட்டுபடியாகக் கூடிய விலையில் மருந்துகளைத் தயாரிக்கும் இந்தியாவின் நன்கு நிறுவப்பட்டத் திறன் ஒட்டுமொத்த மனித குலத்தின் நலனுக்காகவும் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் பிலிப்பைன்சை ஒரு முக்கியப் பங்குதாரராக இந்தியா கருதுவாக பிரதமர் குறிப்பிட்டார்.
விரைவில் பிலிப்பைன்சின் தேசிய தினத்தை முன்னிட்டு, அதிபர் டுடேர்தேவுக்கும், பிலிப்பைன்ஸ் மக்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் மோடி கூறினார்.