ஜம்மு - காஷ்மீரில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு - காஷ்மீர் ஷோபியான் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின் தெற்குப்பகுதியில் உள்ள சோபியான் மாவட்டம், ரேபான் கிராமத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று அதிகாலை பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளைத் தேடும் வேட்டையில் ஈடுபட்டனர். தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்ததால் உடனடியாக அப்பகுதியில் உள்ள இன்டர்நெட் முடக்கப்பட்டது.
தீவிரவாதிகள் இருக்கும் இடத்தை பாதுகாப்பு படையினர் நெருங்கியதும் அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதற்கு பாதுகாப்புப் படையினர் தரப்பிலும் தக்க பதிலடி தரப்பட்டது. இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் 5 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதில் பாதுகாப்புப் படையினருக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த தீவிரவாதிகள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.