இந்தியாவில் தினமும் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்த திட்டம்
இந்தியாவில் தினமும் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்த மத்திய சுகாதாரத்துறை திட்டமிட்டு உள்ளது.
புதுடெல்லி
மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டில் கொரோனா பாதிப்புக்கு 72 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 1,301ல் இருந்து 1,373 ஆக உயர்வடைந்து உள்ளது. 11 ஆயிரத்து 706 பேர் குணமடைந்தும், 29,453 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 39 ஆயிரத்து 980ல் இருந்து 42 ஆயிரத்து 533 ஆக உயர்வடைந்து உள்ளது என கூறப்பட்டுள்ளது.
கொரொனோ பாதிப்புகள் 20 ஆயிரத்தை தாண்டிய 11 நாட்களுக்குப் பிறகு, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று 40,000 ஐத் தாண்டி உள்ளது. இந்த பாதிப்பு ஏப்ரல் 29 அன்று 30,000 ஐத் தாண்டின, ஏப்ரல் 19 அன்று 15,000 15 ஆயிரத்தை தாண்டி உள்ளது
பாதிப்புகள் 10 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரத்தை தாண்ட ஏழு நாட்கள் ஆனது. இந்தியாவில் நோய்த்தொற்று இருமடங்காக எடுக்கும் சராசரி காலம் - ஏப்ரல் தொடக்கத்தில் நான்கு நாட்களில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வரை 11.5 நாட்களாக உயர்ந்துள்ளது.
கடந்த 14 நாட்களில், இரட்டிப்பு விகிதம் 10.5 நாட்களாக இருந்தால், நேற்று அது 12 நாட்களாக உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்து உள்ளார்.
இந்தியாவின் இறப்பு விகிதம், இது 3.2 சதவீதம் ஆகும் ஆகும், இது உலகின் மிகக் குறைவான சதவீதத்தில் ஒன்றாகும், மேலும் கொரோனாவுக்கு எதிரான போர் வெல்வதற்கு அந்த நாடு வெற்றியின் பாதையில் உள்ளது என்றும் அவர் கூறினார்.
தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துவதில் நாடு சரியான பாதையில் உள்ளது என்றும்,கொரோனா ஏற்படுத்தும் சார்ஸ்-கோவி -2 என்ற வைரஸ் பரவுதல் குறைந்து வருவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.
இன்றைய நிலவரப்படி கொரோனா வைரஸ் பாதிப்பு மொத்தம் 1,107,233 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.
ஐசிஎம்ஆர் ஒரு நாளைக்கு சுமார் 70,000 சோதனை அளவை எட்டியுள்ளது மற்றும் சனிக்கிழமை மாலை வரை 10,40,000 சோதனைகளை நடத்தியுள்ளது" என்று ஐசிஎம்ஆர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மார்ச் 31 வரை, நாட்டில் கொரோனா வைரசுக்கு மொத்தம் 47,852 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.இந்த எண்ணிக்கை ஏப்ரல் 30 வரை மொத்தம் 9,02,654 மாதிரிகளாக உயர்ந்தது. மே 1 முதல் சனிக்கிழமை மாலை வரை நாடு முழுவதும் மொத்தம் 1,37,346 சோதனைகள் நடத்தப்பட்டன.
அடுத்த வாரத்திற்குள் தினமும் ஒரு லட்சம் பரிசோதனைகள் செய்யும் திறனை அடைய சுகாதார அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.