ஊரடங்கு நடவடிக்கை இல்லாமல் இருந்தால் 15-ஆம் தேதிக்குள் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பர்- மத்திய சுகாதாரத்துறை
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு இல்லாமல், கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் மட்டும் எடுக்காதிருந்தால் ஏப்ரல் 15-க்குள் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பர்.
புதுடெல்லி
மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு ஊரடங்கு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முக்கியம்.இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு இல்லாமல், கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் மட்டும் எடுக்காதிருந்தால் ஏப்ரல் 15க்குள் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பர்.
நாட்டில் இதுவரை 1.7 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன; நேற்று மட்டும்
16,564 சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்றுநோய்க்கு அரசாங்கத்தின் பதில் "செயலில் உள்ளது. நாங்கள் ஒரு தரப்படுத்தப்பட்ட அணுகுமுறையைப் பின்பற்றியுள்ளோம்.
நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு ஒரு லட்சம் தனிமை படுக்கைகள் மற்றும் 11,500 அவசர சிகிச்சை படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 7,447 ஐ எட்டியுள்ளது. இவற்றில் 642 பேர் குணமாகி உள்ளனர்,239 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரதத்தில் 1035 கொரானா பாதிப்புகள் உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. 40 பேர் உயிர் இழந்து உள்ளனர் என கூறினார்.