இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.
புதுடெல்லி,
கடந்த டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகில் 97 நாடுகளில் பரவி விட்டது. 3 ஆயிரத்து 500-க்கு மேற்பட்டோர் பலியாகி விட்டனர். ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை செயலர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா உள்பட 14 நாடுகளில் இருந்து வருவதற்கு கத்தார் அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது.