மத்தியபிரதேசத்தில் கமல்நாத் அரசை கவிழ்க்க 8 எம்.எல்.ஏ.க்கள் கடத்தலா? - காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பா.ஜனதா மறுப்பு
மத்தியபிரதேசத்தில் கமல்நாத் அரசை கவிழ்க்க 8 எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதாவினர் கடத்திச் சென்று விட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அதை பா.ஜனதா மறுத்துள்ளது.
போபால்,
230 உறுப்பினர்களை கொண்ட மத்தியபிரதேச சட்டசபைக்கு கடந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடந்தது. இதில், காங்கிரஸ் கட்சிக்கு 115 எம்.எல்.ஏ.க்கள் கிடைத்தனர். பா.ஜனதா 108 இடங்களில் வெற்றி பெற்றது.
அறுதி பெரும்பான்மைக்கு 116 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. எனவே, 4 சுயேச்சைகள், 2 பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள், ஒரு சமாஜ்வாடி எம்.எல்.ஏ. ஆகியோரின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. கமல்நாத், முதல்-மந்திரி ஆனார்.
தற்போது, ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், ஒரு பா.ஜனதா எம்.எல்.ஏ.வும் மறைந்து விட்டதால், 2 இடங்கள் காலியாக உள்ளன. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 114 ஆக குறைந்துள்ளது. இது, பெரும்பான்மைக்கு தேவையானதை விட ஒரு இடம் குறைவாகும். சுயேச்சை மற்றும் இதர கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன்தான் ஆட்சி நீடித்து வருகிறது.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை, மத்தியபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங் ஒரு திடுக்கிடும் குற்றச்சாட்டை தெரிவித்தார். மத்தியபிரதேச அரசை கவிழ்க்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு பெரும் பணம் தருவதாக பா.ஜனதா ஆசை காட்டி வருகிறது என்று அவர் கூறினார்.
ஒரு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.வை தனி விமானத்தில் பா.ஜனதா மூத்த தலைவர் ஒருவர் அழைத்துச் சென்றிருப்பதாகவும் அவர் கூறினார். அவர் பொய் சொல்வதாக பா.ஜனதா முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் மறுத்தார்.
திக்விஜய் சிங்கை தொடர்ந்து, மத்தியபிரதேச மாநில உயர் கல்வித்துறை மந்திரியும், காங்கிரஸ் பிரமுகருமான ஜித்து பட்வாரியும் நேற்று இதே குற்றச்சாட்டை தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
ஆட்சியை கவிழ்ப்பதற்காக, மத்தியபிரதேசத்தை சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதாவினர் வலுக்கட்டாயமாக அரியானா மாநிலத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், முன்னாள் மந்திரிகள் நாரோட்டம் மிஸ்ரா, பூபேந்திர சிங், ராம்பால் சிங் உள்ளிட்டோர் இந்த சதியை அரங்கேற்றி உள்ளனர். அரியானாவில் ஒரு ஓட்டலில் 8 பேரும் அடைத்து வைக்கப்பட்டனர். அந்த எம்.எல்.ஏ.க்கள், எங்களை தொடர்பு கொண்டு இந்த தகவலை தெரிவித்தனர். அவர்களை திரும்ப கொண்டுவர முயன்று வருகிறோம்.
4 எம்.எல்.ஏ.க்கள் திரும்பி வந்து விட்டனர். இருப்பினும், பழங்குடியின எம்.எல்.ஏ. பிசாகுலால் சிங்கை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று விட்டனர் என்று அவர் கூறினார்.
கடத்தப்பட்ட 8 எம்.எல்.ஏ.க்களில் 4 பேர் காங்கிரசை சேர்ந்தவர்கள். ஒருவர், சுயேச்சை. மீதி 3 பேரும் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகளை சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.
இதற்கிடையே, ஆட்சி கவிழ்ப்பு முயற்சி குற்றச்சாட்டை பா.ஜனதா மறுத்துள்ளது. இதுகுறித்து மத்தியபிரதேச பா.ஜனதா தலைவர் வி.டி.சர்மா கூறியதாவது:-
ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் பா.ஜனதா ஈடுபடவில்லை. இத்தகைய குற்றச்சாட்டு, துரதிருஷ்டவசமானது. இது, காங்கிரசின் உட்கட்சி மோதல்.
இதற்கும், பா.ஜனதாவுக்கும் சம்பந்தம் இல்லை. மாநிலங்களவை தேர்தலில் மீண்டும் வெற்றி பெறும் நோக்கத்தில் திக்விஜய் சிங் பழி சுமத்துகிறார் என்று அவர் கூறினார்.