டெல்லியில் கழிவுநீர் கால்வாயில் 4 உடல்கள் மீட்பு: கலவரத்தில் இறந்தவர்களா?
டெல்லியில் கழிவுநீர் கால்வாயில் 4 உடல்கள் மீட்கப்பட்டன. அந்த உடல்கள் கலவரத்தில் இறந்தவர்களா என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு டெல்லியில் நேற்று 4 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. முதலில், காலை 8.20 மணிக்கு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் கூறிய தகவலின்படி, பகீரத் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் ஒரு உடல் மீட்கப்பட்டது. அதே கால்வாயில், பிற்பகலில் ஒரு உடல் மீட்கப்பட்டது. பின்னர், கோகால்புரி போலீஸ் நிலையம் அருகே ஒரு உடல் மீட்கப்பட்டது.
சிவ விகார் என்ற இடத்தில் உள்ள கழிவுநீர் கால்வாயில் ஒரு உடல் மீட்கப்பட்டது.
ஆனால், பலியான 4 பேரும், கலவரத்தில்தான் பலியானார்களா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. 4 உடல்களும் அடையாளம் காணப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.