மத்திய பட்ஜெட்:தனி நபர் வருமான வரியில் நிறைய சலுகைகள்
மத்திய பட்ஜெட்டில் தனி நபருக்கான வருமான வரி குறைக்கபட்டு உள்ளது.
புதுடெல்லி
2020-21ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் வாசித்து வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
2020-21ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10 சதவீதமாக இருக்கும்.
வருமான வரி விகிதங்கள் குறைக்கபட்டு உள்ளது. ரூ.5 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு வருமான வரி இல்லை
ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரை வருமானம் இருந்தால், வருமான வரி 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைப்பு.
ரூ.7.5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வருமானம் பெறுவோர் வருமான வரி 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைப்பு
ரூ.10 லட்சத்தில் இருந்து 12.5 லட்சம் வரை வருமானம் பெறுவோர் வருமான வரி 20 சதவீதமாக இருக்கும்
ரூ.12.5 லட்சத்தில் இருந்து 15 லட்சம் வரை வருமானம் பெறுவோர் வருமான வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைப்பு
ரூ.15 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுவோர் வருமான வரி 30 சதவீதமாக இருக்கும்