சரத்பவாரை ஜனாதிபதி பதவிக்கு பரிசீலிக்க வேண்டும் -சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்
சரத்பவாரை ஜனாதிபதி பதவிக்கு பரிசீலிக்க வேண்டும் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறி உள்ளார்.
மும்பை
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சமீபத்தில் காங்கிரசையும் சிவசேனாவையும் ஒன்றிணைத்து மராட்டியத்தில் தனது கட்சியுடன் கூட்டணி அமைத்து அரசு அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.
இந்நிலையில், சிவசேனா மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்பியுமான சஞ்சய் ராவத் கூறியதாவது:-
சரத்பவார் நாட்டின் மூத்த தலைவர். அவரை 2022 ஆம் ஆண்டில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அறிவிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் பரிசீலிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
2022 ஆம் ஆண்டில், ஜனாதிபதி வேட்பாளரைத் தீர்மானிக்க போதுமான பலம் எங்களிடம் உள்ளது என்றும் கூறினார்.