இந்தியாவில் தங்க இறக்குமதி கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவு
2019-ஆம் ஆண்டில் இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவு தங்க இறக்குமதி குறைந்து உள்ளது.
புதுடெல்லி
2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்க இறக்குமதி ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததைவிட 12 சதவீதம் குறைந்து உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த ஆண்டு இந்தியாவின் தங்க இறக்குமதி மிக குறைந்து உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருவதால் தங்கத்தின் சில்லறை வரத்தகம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டில் இந்தியா 831 டன் தங்கத்தை இறக்குமதி செய்தது, இது ஒரு வருடத்திற்கு முன்பு 944 டன்னாக இருந்தது. மதிப்பு அடிப்படையில், 2019 இறக்குமதி கிட்டத்தட்ட 2 சதவீதம் குறைந்து 31.22 பில்லியன் டாலராக உள்ளது.