ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணி: டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீஸ் தடியடி
ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணி நடத்திய டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தினர்.
புதுடெல்லி,
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் விடுதி கட்டணம் கடந்த சில வாரங்களுக்கு முன் பல மடங்கு உயர்த்தப்பட்டது. இதை எதிர்த்து பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர். பிகாஜி கமா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே அவர்கள் சென்றபோது போலீசார் மாணவர்களை தடுத்து நிறுத்தினர்.
அப்போது போலீசாரின் தடுப்பு வேலிகளை கடந்து மாணவர்கள் பேரணியை தொடர முயன்றனர். இதனால் போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.