மனித மேம்பாட்டு அட்டவணையில் இந்தியா 129-வது இடம்

மனித மேம்பாட்டு அட்டவணையில் இந்தியா 130-வது இடத்தில் இருந்து 129-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Update: 2019-12-09 11:43 GMT
புதுடெல்லி,

ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் வெளியிட்டுள்ள 2019 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டு அட்டவணையில் இந்தியா 129-வது இடத்தில் உள்ளது. 

இந்த அட்டவணையில் மொத்தம் 189 நாடுகள் இடம் பெற்றுள்ளன. கடந்த ஆண்டு இந்த அட்டவணையில் இந்தியா 130-வது இடத்தில் இருந்தது.

இது குறித்து பேசிய ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் இந்திய பிரதிநிதி ஷோகோ நோடா, “இந்தியாவில் கடந்த 2005-06 முதல் 2015-16 வரை மொத்தம் 27.1 கோடி மக்கள் வறுமையின் பிடியில் இருந்து மீண்டுள்ளனர்.

கடந்த 1990 முதல் 2018 ஆம் ஆண்டு வரை இந்தியர்களின் ஆயுட்காலம் சராசரியாக 11.6 ஆண்டுகள் அதிகரித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் இந்தியர்களின் கல்வி, மருத்துவ வசதி, வாழ்க்கை தரம் உள்ளிட்டவை உயர்ந்துள்ளது. இது மிகவும் நல்ல செய்தியாகும்” என்று கூறியுள்ளார்.

மேலும் பாலின மேம்பாட்டு அட்டவணையில் இடம் பெற்றுள்ள 162 நாடுகளில் இந்தியா 122-வது இடத்தில் உள்ளது. திருமணமான பெண்களில் 31 சதவீதம் பேர் தங்கள் கணவனால் தாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பாலின மேம்பாட்டு அட்டவணையில் தெற்காசிய நாடுகளை விட இந்தியா சற்று முன்னேறி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்