ராணுவ வீரர்களை ஏமாற்றி துப்பாக்கிகளை தூக்கிச்சென்ற மர்ம நபர்கள்

மத்தியபிரதேசத்தில் மர்ம நபர்கள் இருவர் ராணுவ வீரர்களை ஏமாற்றி துப்பாக்கிகளை தூக்கிச்சென்றனர்.

Update: 2019-12-06 20:48 GMT
போபால்,

மத்தியபிரதேச மாநிலம், ஹோசாங்காபாத் மாவட்டம் பச்மாரி என்ற இடத்தில் ராணுவ சோதனைச்சாவடி ஒன்று உள்ளது. நேற்று நள்ளிரவு 2 மர்மநபர்கள் சோதனைச்சாவடிக்கு சென்றனர். அங்கு இருந்த ராணுவ வீரர்களிடம் நைசாக பேச்சு கொடுத்தனர். அவர்களது கவனத்தை திசை திருப்பி சோதனைச்சாவடியில் இருந்து 2 துப்பாக்கிகளை தூக்கிக்கொண்டு இருவரும் தப்பிச்சென்றனர்.

உடனே இது தொடர்பாக அப்பகுதி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள சாலை மற்றும் ரெயில் நிலையத்தை போலீசார் சுற்றி வளைத்தனர். தேடுதல் வேட்டை தொடர்ந்து நடக்கிறது.

மேலும் செய்திகள்