நிலைக்குழு கூட்டங்களில் எம்.பி.க்கள் முழுமையாக பங்கேற்க வேண்டும் வெங்கையா நாயுடு வேண்டுகோள்

மாநிலங்களவையின் 8 நிலைக்குழுக்களின் தலைவர்களுடன் அவை தலைவர் வெங்கையா நாயுடு நேற்று காலை ஆலோசனை நடத்தினார்.

Update: 2019-12-05 22:00 GMT
புதுடெல்லி, 

மாநிலங்களவையின் 8 நிலைக்குழுக்களின் தலைவர்களுடன் அவை தலைவர் வெங்கையா நாயுடு நேற்று காலை ஆலோசனை நடத்தினார். 8 குழுக்களிலும் 80 எம்.பி.க்கள் உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால் இதுவரை நடைபெற்ற நிலைக்குழு கூட்டங்களில் 18 எம்.பி.க்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.

பின்னர் மாநிலங்களவை கூட்டத்தில் வெங்கையா நாயுடு இதுபற்றி கவலை தெரிவித்தார். அவர் பேசும்போது, “இனி நடைபெற உள்ள நிலைக்குழு கூட்டங்களில் எம்.பி.க்கள் முழுமையாக பங்கேற்க வேண்டும். குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் 25 எம்.பி.க்களின் பிரதிநிதியாக இந்த கூட்டங்களில் பேசுகிறீர்கள். ஒரு உறுப்பினர் பங்கேற்கவில்லை என்றால், 25 எம்.பி.க்களின் குரல் கேட்கவில்லை என்று அர்த்தம். எனவே நாடாளுமன்றத்தின் முக்கிய பொறுப்பாக உள்ள நிலைக்குழு கூட்டங்களில் அதிகமான எம்.பி.க்கள் பங்கேற்பதுடன், பயனுள்ளதாக்க வேண்டும் என அனைத்து கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அவை உறுப்பினர்களை கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

மேலும் செய்திகள்