சட்ட விரோதமாக இயங்கி வந்த 7 துப்பாக்கி தொழிற்சாலைகள் அழிப்பு; 4 பேர் கைது
சட்ட விரோதமாக இயங்கி வந்த 7 துப்பாக்கி தொழிற்சாலைகள் அழிக்கப்பட்டது. மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாட்னா,
பீகாரின் மங்கர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக துப்பாக்கி தொழிற்சாலைகள் இயங்கி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மெருதியாரா பகுதியில் போலீசார் நேற்றுமுன்தினம் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் சிறிய ரக துப்பாக்கிகள் தயாரிக்கும் 7 தொழிற்சாலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. சட்ட விரோதமாக இயங்கி வந்த அந்த தொழிற்சாலைகளை அதிகாரிகள் அழித்தனர். மேலும் அங்கிருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
இந்த விவகாரத்தில் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் 7 சட்ட விரோத துப்பாக்கி தொழிற்சாலைகள் கண்டுபிடித்து அழிக்கப்பட்ட சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.