மெகபூபா முப்தி ஸ்ரீநகரில் உள்ள அரசு இல்லத்துக்கு மாற்றம்
முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி ஸ்ரீநகரில் உள்ள அரசு இல்லத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்ரீநகர்,
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து, ஆகஸ்ட் 5 முதல் சஷ்மே ஷாஹியில் உள்ள ஒரு சுற்றுலா மாளிகை ஒன்றில் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி காவலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில் மெகபூபா முப்தி சுற்றுலா மாளிகையில் இருந்து ஸ்ரீநகரில் உள்ள அரசு இல்லத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். குளிர்காலம் நெருங்குவதாலும், சுற்றுலா மாளிகையில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாலும் அவர் மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மெகபூபா முப்தியை தொடர்ந்து உமர் அப்துல்லாவும் குப்தா சாலையில் உள்ள தன் சொந்த வீட்டில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் உமர் அப்துல்லா ஹரி நிவாசில் தங்க வைக்கப்பட்டிருந்தார் என்றும், பொது பாதுகாப்பு சட்ட பிரிவின் கீ்ழ் மாற்றப்பட்டதும் தெரிய வந்துள்ளது.