வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Update: 2019-10-22 04:23 GMT
புதுடெல்லி,

தென்மேற்கு, மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.  வட தமிழகம், தெற்கு ஆந்திராவை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியானது நிலை கொண்டுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதனால் தமிழகம், ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய கூடும்.  தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இதனுடன் கடல் சீற்றத்துடன் காணப்படும்.  எனவே, மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேபோன்று அரபி கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆக வலுவடைந்து உள்ளது.

இந்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று ஓமனை நோக்கி செல்ல வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்