அடுத்த ஆண்டு முதல் எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவக்கல்லூரிகளில் சேரவும் ‘நீட்’ தேர்வு

அடுத்த ஆண்டு முதல் எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவக்கல்லூரிகளில் சேரவும் நீட் தேர்வு எழுத வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2019-10-05 22:00 GMT
புதுடெல்லி,

நாடு முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் சேர ‘நீட்’ தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஆனால் மத்திய சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவக்கல்லூரிகளில் மட்டும் தனித்தனியாக நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு மருத்துவப்படிப்பு சேர்க்கை நடந்து வந்தது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு (2020) முதல் இந்த கல்லூரிகளில் சேரவும் ‘நீட்’ தேர்வு எழுத வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் கூறுகையில், ‘தேசிய மருத்துவ கமிஷன் சட்டம் அடுத்த கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் மருத்துவக்கல்லூரியில் சேர்வதற்கு ஒரே பொதுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவக்கல்லூரிகளில் சேரவும் ‘நீட்’ தேர்வு எழுத வேண்டும்’ என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்