உத்தரகாண்ட்டில் நாளை நடைபெறும் ஐஐடி பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார்

உத்தராகண்ட் மாநிலம் ரூர்கியில் உள்ள ஐஐடி பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் வரும் வெள்ளிக்கிழமை பங்கேற்க உள்ளார்.

Update: 2019-10-03 16:09 GMT
புதுடெல்லி,

ஜனாதிபதி அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் வரும் வெள்ளிக்கிழமை, அக்டோபர் 4 2019 அன்று உத்தராகண்ட் மாநிலம் ரூர்கியில் உள்ள ஐஐடி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தராகண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் மற்றும் உத்தராகண்ட் கவர்னர் ரானி மவுரியா ஆகியோரும் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர்.

ரூர்கி ஐஐடியில் இந்த ஆண்டு மொத்தம் 2029 பேர் பட்டம் பெறப்போவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்