நான் மனம் உடைந்து போனேன்; அழுக்கான காந்திஜி சிலையை சுத்தம் செய்த சமாஜ்வாடி தலைவர்

அழுக்கான காந்திஜி சிலையை கண்டு நான் மனம் உடைந்து போனேன் என்று அதனை சுத்தம் செய்த சமாஜ்வாடி தலைவர் கூறியுள்ளார்.

Update: 2019-10-03 07:31 GMT
சம்பல்,

நாடு சுதந்திரம் பெற அகிம்சை முறையில் போராடிய மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.  அரசியல் கட்சிகளை சேர்ந்த பல்வேறு தலைவர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

சமாஜ்வாடி கட்சியை சேர்ந்தவர் பிரோஸ் கான்.  உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதிக்கு சென்ற அவர் அங்குள்ள மகாத்மா காந்தி சிலையை தண்ணீர் ஊற்றி கழுவினார்.  இதன்பின்பு சிலை முன்பு அவர் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.  அவரை உடன் சென்றவர்கள் ஆறுதல் கூறி தேற்றினர்.

அவர் திடீரென சிலை முன் அழுதது சுற்றியிருந்தோரை அதிர்ச்சி அடைய செய்தது.  இதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய கான், பா.ஜ.க.வின் மற்றொரு பெயர் நவ்டாங்கி (வித்தை காட்டுபவர்).  காந்திஜியின் சிலை அழுக்காக இருந்தது கண்டு நான் மனம் உடைந்து விட்டேன்.

கண்துடைப்பு செயல்களால் மக்களை முட்டாள்களாக்க முடியாது.  தங்களது ஆதரவு கோட்சேவுக்கா அல்லது காந்திக்கா என்பது பற்றி பா.ஜ.க.வினர் விளக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்