தெலுங்கானாவில் இஸ்ரோ விஞ்ஞானி மர்ம மரணம்
தெலுங்கானாவில் இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர் தனது வீட்டில் இறந்து கிடந்துள்ளார்.
ஐதராபாத்,
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (இஸ்ரோ) தேசிய புவிநுட்ப ஆய்வு மையத்தில் விஞ்ஞானியாக சுரேஷ் குமார் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவரது வீடு தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் அமீர்பேட் பகுதியில் அமைந்துள்ளது.
இந்த நிலையில், அவர் தனது வீட்டில் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுபற்றி விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.