சாதி பாகுபாட்டை போக்குவதே நாட்டின் வளர்ச்சிக்கு வழி - மத்திய மந்திரி பேச்சு

சாதி பாகுபாட்டை போக்குவதே நாட்டின் வளர்ச்சிக்கு வழி என்று மத்திய மந்திரி தெரிவித்தார்.

Update: 2019-09-22 22:15 GMT
திருவனந்தபுரம்,

சமூக சீர்திருத்தவாதியும், ஆன்மிகவாதியுமான ஸ்ரீ நாராயண குருவின் 92-வது நினைவு தின நிகழ்ச்சி, திருவனந்தபுரத்தில் உள்ள சிவகிரி மடத்தில் நடைபெற்றது. அதில், மத்திய மின்துறை இணை மந்திரி ஆர்.கே.சிங் கலந்து கொண்டார்.

அவர் பேசுகையில், “சமூகத்தில் நிலவும் தீமைகளை நாராயண குரு சுட்டிக்காட்டினார். பின்தங்கிய மக்களை கைதூக்கி விட்டார். அனைத்து சமுதாயத்தினரும் கோவிலுக்குள் நுழையவும், கல்வி பயிலவும் வழி வகுத்தார். சாதி பாகுபாட்டை போக்கினால்தான் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி சாத்தியமாகும்” என்றார்.

நிகழ்ச்சியில், கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமது கானும் கலந்து கொண்டார்.

மேலும் செய்திகள்