பாக். வான்பரப்பு வழியாக பிரதமர் மோடியின் விமானம் பயணிக்க இந்தியா அனுமதி கோரியிருப்பதாக தகவல்
பாகிஸ்தான் வான்பரப்பு வழியாக பிரதமர் மோடி செல்லும் விமானம் பயணிக்க இந்தியா அனுமதி கோரி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுடெல்லி,
ஐக்கிய நாடுகள் அவையின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வரும் 21 ஆம் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார். 27 ஆம் தேதி வரை அமெரிக்காவில் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
பிரதமர் மோடி நியூயார்க்கிற்கு பாகிஸ்தான் வான்பரப்பு வழியாக செல்ல, அந்நாட்டிடம் இந்தியா முறைப்படி அனுமதி கோரியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆலோசனைக்கு பிறகு பதில் அளிப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. முன்னதாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விமானத்திற்கு பாகிஸ்தான் அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்விற்கு இந்தியா தனது கவலையை பாகிஸ்தானிடம் தெரிவித்தது.