இந்துக்களுக்கு அசைவ பிரியாணி பரிமாறிய 43 பேர் மீது வழக்கு பதிவு

இந்துக்களுக்கு அசைவ பிரியாணி பரிமாறியதாக 43 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-09-06 22:54 GMT
லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் மகோபா மாவட்டம் சாலட் கிராமத்தில் உர்ஸ் திருவிழா நடைபெற்றது. அதையொட்டி நடந்த சமுதாய விருந்து நிகழ்ச்சியில், சில இந்துக்களுக்கு அசைவ பிரியாணி பரிமாறப்பட்டது.

இதற்கிடையே, அந்த பகுதிக்கு சென்ற பா.ஜனதா எம்.எல்.ஏ. பிரிஜ்பூஷண் ராஜ்பூத்திடம் இதுபற்றி பொதுமக்கள் முறையிட்டனர். அதைத்தொடர்ந்து, எம்.எல்.ஏ. தலையீட்டின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அசைவ பிரியாணி பரிமாறிய 43 பேர் மீது மத உணர்வுகளை புண்படுத்தியது உள்ளிட்ட குற்றங்களுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், யாரும் கைது செய்யப்படவில்லை.

அதே சமயத்தில், வேண்டுமென்றே பரிமாறப்பட்டதாக கூறுவது உண்மையல்ல என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

மேலும் செய்திகள்