ரஷ்யா சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி

ரஷ்யா சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நாடு திரும்பினார்.

Update: 2019-09-06 01:51 GMT
புதுடெல்லி,

இந்திய பிரதமர் மோடி, 2 நாட்கள் அரசு முறைப்பயணமாக ரஷ்யா சென்றார்.  இந்த சுற்றுப்பயணத்தில் இந்தியா-ரஷ்யா இடையேயான 20-வது உச்சி மாநாட்டில் மோடி பங்கேங்றார். ரஷ்ய அதிபர் புதினையும் சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பு உறவுகள் மற்றும் பல்வேறு துறைகள் சார்ந்த ஒத்துழைப்பு குறித்து பேசினார். பின்னர் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ஜப்பான் நாட்டு பிரதமர் ஷின்சோ அபே, மங்கோலிய அதிபர், மலேசிய பிரதமர் மகாதீர் முகமது உள்ளிட்ட தலைவர்களையும் பிரதமர் மோடி ரஷ்யாவில் சந்தித்தார்.  ரஷியாவின் விளாடிவோஸ்டோக் நகரில் கிழக்கத்திய பொருளாதார  அமைப்பின்  மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்றார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று அதிகாலை நாடு திரும்பினார். 

மேலும் செய்திகள்