ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், முன் ஜாமீன் என்பது அடிப்படை உரிமை இல்லை என கூறிய சுப்ரீம் கோர்ட், ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.

Update: 2019-09-05 05:44 GMT
புதுடெல்லி

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டை சுப்ரீம் கோர்ட் நிராகரித்து உள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா - அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரத்தின் வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது.

விசாரணை தொடங்கியதும் வழக்கில் இருதரப்பிலும் முன் வைக்கப்பட்ட வாதங்களை நீதிபதிகள் கேட்டனர். பின்னர் தீர்ப்பளித்தனர். அப்போது ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்து விட்டது.

ஐ.என்.எக்ஸ் மீடியா  வழக்கில் விசாரணை சரியான திசையில் செல்கிறது.  நாங்கள் அதில் தலையிட விரும்பவில்லை. முன்ஜாமீன் என்பது அடிப்படை உரிமை இல்லை. ஆரம்ப கட்டத்தில் முன்ஜாமீன் வழங்குவது விசாரணையை விரக்தியடையச் செய்யலாம். முன்ஜாமீன் வழங்குவதற்கு இது பொருத்தமான வழக்கு அல்ல. பொருளாதார குற்றங்கள் வெவ்வேறு நிலைகளில் நிற்கின்றன, அது வெவ்வேறு அணுகுமுறையுடன் கையாளப்பட வேண்டும்.

விசாரணை அமைப்புகளுக்கு ப.சிதம்பரம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பில் கூறினர்.

மேலும் செய்திகள்