சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சரின் மகன் அமித் ஜோகி கைது

சத்தீஸ்கார் மாநில முன்னாள் முதலமைச்சரின் மகன் அமித் ஜோகி கைது செய்யப்பட்டார்.

Update: 2019-09-03 07:57 GMT
பிலாஸ்பூர்,

சத்தீஸ்கார் மாநில முன்னாள் முதலமைச்சரும், ஜனதா காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் ஜோகியின் மகன் அமித் ஜோகி கைது செய்யப்பட்டார்.

அமித் ஜோகிக்கு எதிராக பா.ஜ.க. கட்சியின் வேட்பாளர் சமீரா பைக்ரா கடந்த பிப்ரவரி மாதம் போலீசில் புகார் செய்தார். அவரது புகாரில், அமித் ஜோகி 2013 தேர்தலுக்கான  வேட்பு மனுவில்   பிறந்த இடம் மற்றும் வருடம் குறித்து தவறான தகவல்களை தெரிவித்து உள்ளார் என்று கூறப்பட்டு உள்ளது.

போலீசார் அமித் ஜோகிக்கு எதிரான புகாரை கடந்த ஆறு மாதமாக விசாரணை செய்து வந்தனர். தற்போது, பிலாஸ்பூரீல் இருந்து போலீஸ் அமித் ஜோகியை கைது செய்துள்ளதாகவும். அவர் பிறந்த இடம் குறித்த தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தவறான தகவல்களை வழங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசாத் அகர்வால் பத்திரிக்கையாளருக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்