உத்தரகாண்டில் பாறைகள் சரிந்து விழுந்து விபத்து: யாத்திரீகர்கள் 6 பேர் பலி

உத்தரகாண்டில் புனித யாத்திரை முடித்து விட்டு திரும்பும் போது பாறைகள் சரிந்து விழுந்து விபத்திற்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.

Update: 2019-08-06 17:23 GMT
டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம்  பத்திரீநாத்தில் இருந்து புனித யாத்திரையை முடித்துவிட்டு பேருந்தில் யாத்திரீகர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பேருந்து மீது பாறைகள் உருண்டு வந்து விழுந்தது. இதில் பாறை சரிவில் சிக்கி  6 யாத்திரீகர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.  மேலும், 8 யாத்திரீகர்கள் படுகாயமடைந்தனர். 

பாறை சரிவில் சிக்கி இறந்த யாத்திரீகர்களின் உடல்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுப்பட்டனர். இந்த விபத்தில் இருந்து மீட்கப்பட்ட  3  யாத்திரீகர்கள்  மும்பையை சேர்ந்தவர்கள் என்பது  தெரியவந்துள்ளது.  மற்றவர்களின் நிலவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீர்ஹட்டு என்ற இடத்தில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால்  ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் மண்சரிவு ஏற்பட்டது .இதையடுத்து பாதுகாப்பை கருத்தில் கொண்டு  காவல்துறையினர்  ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை வழியை திங்கட்கிழமை மூடினர். நிலைமை சரியானதையடுத்து நேற்று காலை மீண்டும் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்