ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு காரணங்களுக்காக மாதா யாத்திரை நிறுத்தம்

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு காரணங்களுக்காக மாதா யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Update: 2019-08-03 10:33 GMT
ஜம்மு,

காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ முகாம்களை தாக்க ஜெய்ஸ் - இ - முகமது தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்திய ராணுவ துருப்புகளை தாக்க திட்டமிட்டதை அடுத்து காஷ்மீர் அரசு பாலிடெக்னிக் விடுதியில் இருந்து மாணவர்கள் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த கூடும் என்பதால் பாதுகாப்பு கருதி அமர்நாத் யாத்திரையையடுத்து காஷ்மீரில் மாதா யாத்திரை எனப்படும் துர்க்கையம்மன் யாத்திரையும் நிறுத்தப்பட்டுள்ளது. 

ஜூலை 25-ம் தேதி முதல் செப்டம்பர் 5-ம் தேதி வரை மாதா யாத்திரை நடைபெறும் நிலையில் தற்போது இந்த யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்