உக்ரைன் நாட்டின் புதிய அதிபராக பதவி ஏற்ற வெலோடிமிடர் ஜெலன்ஸ்கிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

உக்ரைன் நாட்டின் புதிய அதிபராக பதவி ஏற்ற வெலோடிமிடர் ஜெலன்ஸ்கிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2019-08-01 20:28 GMT
புதுடெல்லி,

இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் வெலோடிமிடர் ஜெலன்ஸ்கி வாழ்த்து தெரிவித்தார்.

கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடுகளின் ஒன்றான உக்ரைன் நாட்டில் கடந்த மே மாதம் நடந்த அதிபர் தேர்தலில் புதிய அதிபராக வெலோடிமிடர் ஜெலன்ஸ்கி, 42 பதவியேற்றார். 

இந்நிலையில் நேற்று தொலை பேசிவாயிலாக பிரதமர் மோடியிடம் உரையாடினார். அப்போது இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார். பதிலுக்கு உக்ரைன் அதிபராக பதிவேற்ற ஜெலன்ஸ்கிக்கும், அவரது மக்கள் கட்சியையும் பாராட்டி மோடி வாழ்த்து தெரிவித்தார்.  

மேலும் செய்திகள்