தோல்விக்கு பின்னர் முதல்முறையாக அமேதி சென்ற ராகுல் காந்தி

பாராளுமன்ற தேர்தலில் பெற்ற தோல்விக்கு பிறகு ராகுல் காந்தி இன்று முதல்முறையாக அமேதி சென்றார். அங்கு கட்சி தொண்டர்களை சந்தித்து ராகுல் காந்தி பேசினார்.

Update: 2019-07-10 10:54 GMT
லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி பாராளுமன்ற தொகுதியில் நான்குமுறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல் காந்தி, கடந்த பாராளுமன்ற தேர்தலில் அமேதி மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.

அந்த தேர்தலில் அமேதி தொகுதியை பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் பறிகொடுத்த ராகுல் காந்தி, வயநாட்டில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சமீபத்தில் ராஜினாமா செய்த ராகுல் காந்தி பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு பின்னர் முதல்முறையாக இன்று  அமேதி தொகுதிக்கு வந்தார்.

அங்குள்ள காங்கிரஸ் நிர்வாகிகள், பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.  இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் கலந்து கொள்கிறார்.

மேலும் செய்திகள்