ஒரு தேசம், ஒரே தேர்தல் திட்டம் குறித்து சீதாராம் யெச்சூரி கருத்து
ஒரு தேசம், ஒரே தேர்தல் திட்டம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யும், ‘ஒரு நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. கூட்டத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சி தலைவர்களும், ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்களை நடத்துவது சாத்தியம் இல்லை என்றும், நடைமுறை சிக்கல்கள் பல உள்ளன என்றும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இந்த திட்டம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்கள் சந்திப்பில், “ நாடாளுமன்றத்திற்கும், அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் மத்திய அரசின் திட்டம் என்பது, அரசியலமைப்புச்சட்டம் மத்திய அரசுக்கு வழங்கி உள்ள சட்டம் இயற்றும் அதிகாரத்தையே சேதப்படுத்துவதாகும்.
இந்த திட்டமானது கூட்டாட்சி தத்துவத்துக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானது. நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறையின் வேரினை பாதிக்கும் என்ற உண்மையின் அடிப்படையில்தான் இதற்கு எங்களின் எதிர்ப்பு இருக்கிறது. நிதிஆயோக் அமைப்பின் ஆலோசனைப்படி தேர்தல் நடத்த மத்திய அரசு முயற்சித்தால் அதை முழுமையாக எதிர்ப்போம்” என்று தெரிவித்தார்.