ஒரே நாடு ஒரே தேர்தல் :டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது
'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது.
புதுடெல்லி,
மக்களவை தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், தேசிய மாநாட்டு கட்சி பாரூக் அப்துல்லா, சிரோமணி அகாலி தளம் சுக்பீர் சிங் பாதல், பிஜூ ஜனதா தளம் நவீன் பட்நாயக், மக்கள் ஜனநாயக கட்சி மெகபூபா முப்தி, ஓய் எஸ் ஆர் காங்கிரஸ் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுக சார்பில் அமைச்சர் சி.வி.சண்முகம், நவநீதகிருஷ்ணன் எம்.பி. ஆகியோர் சென்று உள்ளனர்.ஆனால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
அனைத்துக்கட்சி கூட்டத்தில் நாடு முழுவதும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்படுகிறது.