பீகாரில் சுட்டெரிக்கும் வெயில்: 130-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதி

பீகாரில் சுட்டெரிக்கும் வெயிலின் கொடுமையால் 130-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2019-06-18 11:12 GMT
பாட்னா,

நாட்டின் பல மாநிலங்களில், தென்மேற்கு பருவ மழை தொடங்கி மழை பெய்து வரும் நிலையில் அதற்கு நேர்மாறாக வட மாநிலங்களில் வெயில் கடுமையாக கொளுத்தி வருகிறது.

வட மாநிலங்களில் குறிப்பாக பீகாரில் வெயிலின் தாக்கம் இயல்பைவிட மிக அதிகமாகவே உள்ளது. கடந்த  2 நாட்களில் பீகார் மாநிலத்தில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதுவரை 184 பேர் பலியாகி உள்ளனர். இதில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 113 பேர் பலியாகி விட்டனர். மேலும் 130-க்கும் மேற்பட்டோர்   கயா, பாட்னா, பகல்பூரில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் முதியோர் மற்றும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று செவ்வாய்க்கிழமை வெயில் மேலும் அதிகரிக்கும் என வானிலை  ஆய்வு மையம் கூறி இருந்தது. இதனால் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என கயா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  பீகாரில் கடந்த 32 நாட்களில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்